நடிகர் தனுஷ் மற்றும் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபர் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து விஜயகாந்த் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அது வெறும் புரளி என்று தெரிய வந்ததையடுத்து தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் தனுஷ் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அங்கு நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. விஜயகாந்த் மற்றும் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.







