நள்ளிரவு 2 மணி வரை மதுக்கடைகள் இயங்கும்..!
அசாம் தலைநகர் கவுகாத்தியில் நள்ளிரவு 2 மணி வரை மதுக்கடைகள் இயங்கும் என முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் இயங்குகின்றன.
இந்த அலுவல் நேரத்தை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் அலுவல் நேரம் இதுவரை மாற்றப்படப்படவில்லை. இந்நிலையில் அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா இவ்விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அசாம் அமைச்சரவைக் கூட்டம். முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா கூறியதாவது, “அசாம் மாநிலத்தில் கவுகாத்தி, திப்ருகார், சில்சார் ஆகிய மாநகரங்களில் உள்ள மதுக்கடைகள் 24 மணி நேரமும் இடைவெளியின்றி இயங்கலாம்.
மற்ற நகரங்களில் நள்ளிரவு 2 மணி வரை கடைகள் இயங்கலாம். கிராமங்களில் இரவு 11 மணி வரை கடைகள் இயங்கலாம்.கவுகாத்தியில் நள்ளிரவு 2 மணி வரை மதுக்கடைகள் இயங்கலாம். பொதுவாக கடைகளின் அலுவல் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் ஊழியர்கள் வாரத்துக்கு 48 மணி நேரம் மட்டுமே பணியாற்ற வேண்டும்.
ஊழியர்களை சுழற்சி முறையில் பணியில் அமர்த்திக்கொள்ளலாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் கோலப் சந்திர போர்போராவின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.





