--- --:--:-- --

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு ஆறு நாட்கள் தடை..!

17

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை மதுபான கடைகள் இயங்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழா கடந்த 27ஆம் தேதி குடியேற்றத்துடன் தொடங்கியது.

 

இதனிடையே திருவண்ணாமலை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் மதுபான கடைகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடிகள் இன்று முதல் ஆறு நாட்களுக்கு திறக்க மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

 

Right Menu Icon