கொடநாடு வழக்கு விசாரணை ஜனவரி.27க்கு ஒத்திவைப்பு..!
கொடநாடு வழக்கை இன்று மீண்டும் விசாரித்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற சாட்சிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளதால் வழக்கு விசாரணையை ஜனவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கொடநாடு வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகன் விசாரணை நடத்தினார். வழக்கின் சாட்சிகள் இடையே சிபிசிஐடி விசாரணை நடத்த உள்ளதால் வழக்கு ஜனவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 720 தொலைபேசி உரையாடல் பதிவுகள் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.





