ரவுடிகளுடன் சேர்ந்து பட்டா கத்தியால் பிறந்த நாள் கொண்டாடிய வழக்கறிஞர்!
சென்னை பள்ளிக்கரணை அறிக்கையை ரவுடிகளுடன் சேர்ந்து இரண்டடி நீள கத்தியை கொண்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வழக்கறிஞர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 18ஆம் தேதி பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கிராந்தி என்பவர் தனது பிறந்தநாளை பள்ளிக்கரணை அடுத்த அரசன்கழநியில் கொண்டாடியுள்ளார்.
ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் கூட்டாளிகளிடம் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட ரவுடிகளும் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவிய நிலையில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கறிஞர் கிராந்தி உட்பட மற்றவர்களை தேடி வருகின்றனர்.






