--- --:--:-- --

சட்டக்கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

4

செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி கவிப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து விவகாரத்தை விசாரிக்க விசாரணை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதுகுறித்து சட்டக் கல்வி இயக்குநர் சொக்கலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விசாரணை மேற்கொள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வரும், பேராசிரியருமான கௌரி ரமேஷ் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விசாரணைக்கு கல்லூரி சார்பாக முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon