நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு..!
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு விண்ணப்பிக்க பிப்ரவரி ஒன்பதாம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் பின்பு மார்ச் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. கூடுதல அவகாசம் வழங்கப்பட்டும் ஏராளமானோர் விண்ணப்பிக்க தவறினர். இதனால் உரிய நேரத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்காக தேசிய தேர்வு முகமை சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி இன்றும் நாளையும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை இரவு 10:59 மணி வரை ஆன்லைன் வழியாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பிறகு நாளை இரவு 11:59 மணிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே ஐந்தாம் தேதி நாடு முழுவதும் 571 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.





