ஓட்டு போட சொந்த ஊர் போகும் மக்களுக்கு நற்செய்தி..!
மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தமிழ்நாட்டில் 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு வருகிற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளோடு 2970 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 17, 18 ஆகிய தேதிகளில் பிற ஊர்களில் இருந்து 3 ஆயிரத்து 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தேர்தல் முடிந்த பிறகு சென்னை திரும்ப வருகிற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளோடு 1825 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.





