--- --:--:-- --

ஊரடங்கால் ராஜநாகம், பூச்சிகளை உண்ணும் மக்கள்!

1

ஊரடங்கு காரணமாக நாட்டின் ஒரு சில பகுதிகளில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொடிய விலங்குகளை மக்கள் உணவாக உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரொனாவைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் உணவு பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. அதன் விளைவாக பாம்பு, தவளை போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

 

அந்த வகையில் அருணாச்சல பிரதேசத்தில் 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனப்பகுதியில் வேட்டையாடி ஒரு சிலர் உணவாக உட்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பீகார் மாநிலம் ஜெகநாத் பகுதியில் சிறுவர்கள் தவளைகளைப் பிடித்து உணவாக உட்கொண்டு வருகின்றனர்.

 

குப்பைகள் மற்றும் சுகாதாரமற்ற நிலையில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் இருந்து தவளைகளைப் பிடித்து உண்கின்றன. அந்த சிறுவர்கள் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததாலும் வீட்டில் உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்ட காரணத்தாலும் தவளைகளைப் பிடித்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த சிறுவர்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Right Menu Icon