விராட் கோலி, நடிகை தமன்னாவுக்கு கேரளா உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!
ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக விளக்கம் அளிக்க கேட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னா மற்றும் நடிகர் ஒருவருக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானவை என்று பிரபலமாக இருப்பவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக போலி வாக்குறுதிகள் உடன் பார்வையாளர்களை ஈர்த்ததாகவும் அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி தமது கோரிக்கைகள் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.






