விஜய்யை கடுமையாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்!
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், “விஜய்க்கு என்ன கொள்கை இருக்கு? அவரிடம் ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதால் ஊடகங்கள் அவரை ஃபோகஸ் செய்கின்றன.
காங்கிரஸுக்கு மாற்றாக உருவான கட்சி திமுக. அப்படி எந்தக் கட்சிக்கு மாற்றாக விஜய் வந்திருக்கிறார். இதுவரை யாரையாவது விஜய் விமர்சித்திருக்கிறாரா?” எனக் கேள்வியெழுப்பினார்.





