100 அடி உயரத்திலிருந்து இளைஞர் தவறி விழுந்து பலி..!
உ.பியில் 100 அடி உயரத்திலிருந்து இளைஞர் தவறி விழுந்து பலியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜான்பூர் அருகே, அவ்னிஷ் குமார் (31) என்பவரை குழந்தை திருடன் எனக்கூறி மக்கள் துரத்தியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பிய அவ்னிஷ், 100 அடி உயர பாலத்தின் மீது ஏறியுள்ளார். சுமார் 8 மணி நேரமாக போராடிய அவர், ஒரு கட்டத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார். சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.





