--- --:--:-- --

கன்னியாகுமாரி காங்கிரஸ் எம்‌.பி வசந்த்குமார் காலமானார்..!

14

 கன்னியாகுமரி தொகுதியின் மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வசந்தகுமார் காலமாகியுள்ளார்.

 

இவருக்கு கடந்த 11ஆம் தேதி தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவருடைய மனைவி தமிழ்செல்விக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு அவரும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

இந்த இரண்டு வார காலமாக தொடர்ச்சியாக அவருடைய மனைவியின் உடல் நிலையை விட இவருடைய உடல் நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகியானது. மேலும்  தொடா்நது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

 இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Leave a Reply

Right Menu Icon