--- --:--:-- --

நித்யானந்தாவுக்கு கைலாசாவில் விவசாயம் செய்ய தனக்கு நிலம் ஒதுக்க விவசாயி கடிதம்…!

12

கைலாசாவில் விவசாயம் செய்ய தனக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என மதுரை விவசாயி ஒருவர் நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கைலாச நாடு உருவாக்கியுள்ளதாக நித்தியானந்தா கூறிய நிலையில் மதுரை டெம்பிள் சிட்டி உணவகத்தின் கிளையை அங்கு துவங்க அனுமதி வேண்டி குமார் என்பவர் நித்தியானந்தாவிற்கு கோரிக்கை வைத்தார்.

 

அதனை ஏற்பதாக நித்யானந்தா கூறிய நிலையில் இயற்கை விவசாயம் செய்து வருவதாக கூறும் மதுரையை சேர்ந்த பாண்டி துரை என்பவர் கைலாசாவில் விவசாயம் செய்ய நிலம் தருமாறு நித்தியானந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon