திமுகவை பற்றி தெரிந்து கொண்டதால்தான் பேரணியில் இருந்து கமலஹாசன் விலகிக்கொண்டார்
திமுகவை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டதால்தான் பேரணியில் இருந்து கமலஹாசன் விலகிக்கொண்டார் என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, பைங்காநாடு, மறவக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேட்டூர் அணையில் தொடர்ந்து 120 அடி தண்ணீர் இருப்பது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில்தான் எனவும் அதனால் அதிமுகவை மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்றும் கூறினார்.





