கி.ஆ.பெ.விசுவநாதம் பெயர்த்தி நாதகவில் இணைந்தார்..!
‘முத்தமிழ்க் காவலர்’ என்று போற்றப்படும் கி.ஆ.பெ.விசுவநாதம் பெயர்த்தி வெற்றிச்செல்வி, சீமான் முன்னிலையில் நாதகவில் இணைந்தார்.
நீதிக்கட்சியைத் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்ற பெரியார் முடிவெடுத்தபோது, அதை எதிர்த்து நீதிக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகிய கி.ஆ.பெ., தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்தார். தற்போது அவரின் பெயர்த்தி அதே பாதையில் பயணிக்க முடிவெடுத்துள்ளார்.





