--- --:--:-- --

2ஜி மேல் முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு..!

8

2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரிய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த மனுக்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

 

இந்திய அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ ராசா, கனிமொழி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்டோரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு விடுவித்ததை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத் துறையும் கடந்த ஆண்டு மேல்முறையீடு செய்து இருந்தனர்.

 

இந்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என இரு அமைப்புகளும் மனு தொடர்ந்திருந்தனர். இந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த வழக்கு விசாரணையை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வாதத்திற்கு எதிர் மனுதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon