--- --:--:-- --

ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பு மருந்தை முதலில் தனக்கு செலுத்தப்போகும் அதிபர் புதின்..!

7.1

ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பு மருந்தை தனக்கு செலுத்த இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ரஷ்ய ஊடகங்கள் தென்கொரிய அதிபரை சியோலில் சந்திப்பதற்கு முன்னர் ஸ்புட்னிக் 5 கொரொனா தடுப்பு மருந்தை தனக்கு செலுத்த இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

 

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஷ்யா இதுவரை வெளியிடவில்லை. ரஷ்யாவின் காமாலியா நோய் தொற்று தடுப்பு அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து முதல் தடுப்பு மருந்து தயாரித்தது.

 

இதற்கு ஸ்புட்னிக் 5 என்று பெயரிட்டு கடந்த மாதம் பதிவு செய்தது. மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கு மருந்தை செலுத்த அதிபர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon