--- --:--:-- --

கடலூரில் இடி தாக்கியதில் அக்காவும், தம்பியும் உயிரிழப்பு..!

9

டலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இடி தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமியும் சிறுவனும் பரிதாபமாக உயிரிழந்தனர். மனபாக்கம் கிராமத்தை சேர்ந்த சண்முகத்தின் மகள் பதினோரு வயது நிஷா மற்றும் மகன் 10 வயது கவியரசு ஆகியோர் நேற்று விளை நிலத்திலிருந்து மாடுகளை வீட்டிற்கு ஒட்டி வந்தனர்.

 

அப்போது எதிர்பாராதவிதமாக இடி தாக்கியதில் அக்காளும் தம்பியும் உயிரிழந்தனர். நிகழ்வு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon