மல்லிகைப் பூ 1 கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனை..!
இன்று வரலட்சுமி விரதம் , ஓணம் பண்டிகை என்பதால் ஈரோடு மாவட்டத்தில் மல்லிகைப் பூ விலை 2000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சத்தியமங்கலம், கொத்தமங்கலம் தொட்டம்பாளையம் பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை சாகுபடி செய்து வருகின்றனர். வரலட்சுமி விரதம், பிரதோஷம் மற்றும் சுபமுகூர்த்த தினம் என்பதால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்து விற்பனையாகிறது.






