3 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்..!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை 3 நாள்கள் நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் இந்தக் கூட்டத்தொடரில் வினா விடை இல்லை என்றும் கூறினார்.அதிமுக சட்டமன்றக் குழு தலைவர், கொறடா குறித்த முடிவு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றார்.
தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் உரையாற்றினார்.
இதன்பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அலுவல் ஆய்வுக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.





