அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயம் இல்லை..!
தலைநகர் டெல்லியில் 17 மாதங்களுக்கு பின் செப்டம்பர் 1ஆம் நாள் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரொனா பரவல் என்பதால் கடந்த வருடம் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருந்த நிலையில் 17 மாதங்களுக்குப் பிறகு அடுத்த மாதம் 1 ஆம் நாள் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் நாளும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் எட்டாம் நாளும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயம் இல்லை எனவும் விருப்பமுள்ள பெற்றோர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.







