பிறந்து 3 மாதமே ஆன பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்..!
திருவண்ணாமலை அடுத்த பிச்சானந்தம் கிராமத்தில் பிறந்து 3 மாதமே ஆன பச்சிளம் குழந்தையின் தலை மீது ஸ்பீக்கர் பாக்ஸ் தவறி விழுந்ததில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் தந்தை கூலி வேலைக்கு சென்ற நிலையில் மனைவி குழந்தைகளை கவனித்துக் கொண்டு உள்ளார்.
அப்பொழுது தன்னுடைய மூத்த குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தபொழுது பரண் மீது இருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் 3 மாத குழந்தை மீது வீழ்ந்தது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.






