மேகதாது அணை விவகாரத்தில் பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!
மேகதாது அணை விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை கூட்டத்தில் விவாதிக்க கூடாது என பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது அணை குறித்து கூட்டத்தில் விவாதிக்க கூடாது என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.






