--- --:--:-- --

நடிகை நயன்தாராவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறதா..?

4

தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

 

சுமார் ஆறு வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

நடிகை நயன்தாராவின் தந்தைக்கு கூட நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி நயன்தாராவை குடும்பத்தினர் வற்புறுத்துவதாகவும் அவர்களது நிர்பந்தம் காரணமாக நயன்தாராவும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டதாகவும் மலையாள ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

 

இதனால் அடுத்த சில மாதங்களில் நயன்தாரா திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon