ஆயுள் தண்டனை கைதிகளை மணக்கும் பெண்களின் முடிவு சுயவிருப்பத்திலா அல்லது கட்டாயத்தினாலா?
ஆயுள் தண்டனை கைதிகளை மணக்கும் பெண்களின் முடிவு சுயவிருப்பத்திலா அல்லது கட்டாயத்தினாலா என்பதைக் கண்டறிய மகளிர் ஆணையங்ளை உருவாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரோல் கோரி சில ஆயுள் தண்டனை கைதிகளின் மனைவிகள் தொடர்ந்துள்ள வழக்கு நீதிபதி கிருபாகரன், வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சாதாரண வாழ்க்கை வாழும் ஆண்களை திருமணம் செய்யவே பெண்கள் பல நிபந்தனைகளை விதிக்கும் போது ஆயுள் கைதி தண்டனையை சிறையில் இருப்பவர்களை திருமணம் செய்ய எந்த பெண்ணும் முன்வர மாட்டார்களா என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மீண்டும் சிறைக்கு செல்லும் ஆயுள் தண்டனை கைதிகளை மணம் முடிப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்கள் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள் திருமணமான ஒரு பெண்ணுக்கு கணவனின் துணை வாழ்க்கை முழுவதும் தேவை என்றும் கூறினார்.
எனவே ஆயுள் கைதிகளை மணக்கும் பெண்களின் முடிவு சுய விருப்பத்திலா அல்லது கட்டாயத்தினாலா என்பதை கண்டறிய மகளிர் ஆணையங்களை உருவாக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகளும், மகளிர் ஆணையங்களும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்,.






