முதலமைச்சரை பற்றி அவதூறாக பேசுவதா? – செல்வப்பெருந்தகை கண்டனம்
குழந்தை செல்வங்கள் அப்பா என அழைத்ததை வன்மத்துடன் கொச்சைப்படுத்தி பேசியதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், முதலமைச்சரை அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
வயதில் மூத்தவர்களை அப்பா என அழைப்பது தமிழ்நாட்டில் காலங்காலமாக இருக்கும் வழக்கத்தில் ஒன்றுதான் என்றும் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.





