--- --:--:-- --

தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா?

3

வம்பர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தங்கம் விலை இறங்கு முகத்தில் இருந்தது. அதன் படி நேற்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.11,400க்கும் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.91,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

வரும் மாதங்களில் தங்கத்தின் விலையில் மற்றொரு குறிப்பிடத்தக்க உயர்வு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. லட்சுமி டயமண்ட்ஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சேதன் மேத்தா, ‘CNBC TV 18’ உடன் பேசுகையில், 2026 புத்தாண்டில் தங்கத்தின் விலை குறித்து கணித்துள்ளார். இந்த ஆண்டு, முதலீட்டு தங்க கொள்முதல், நகை வாங்குதல்களை விட வலுவாக உள்ளது என்று மேத்தா விளக்கியுள்ளார்.

 

தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு இன்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் படி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,500க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,600க்கும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.76,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.173க்கும் ஒரு கிலோ ரூ.1,73,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon