--- --:--:-- --

தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா?

5

ர்வதேச பொருளாதார நிலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உள்ளூர் சந்தை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.

 

அதன் படி நேற்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.11,520க்கும் சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.92,160க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,720க்கும் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,780க்கும் சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.174க்கும், ஒரு கிலோ ரூ.1,74,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon