செய்தி வாசிப்பாளரான திவ்யா துரைசாமி ஹீரோயின் ஆகப்போகிறாரா?
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து தனது வாழ்க்கையை தொடங்கிய திவ்யா துரைசாமி ஹீரோயினாக மாறப் போகிறார். திவ்யா துரைசாமி இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்திருந்த மாகாபா ஆனந்த்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார். அவர் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. திவ்யா துரைசாமி சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாகவும் வைத்துள்ளார்.
அதனால் சமூக வலைதளங்களில் பிரபலமாகவும் உள்ளார், இவருக்கென ரசிகர்களும் உண்டு. எனவே நடிகர் ஜெய் உடன் இணைந்து நடிக்கும் படத்திற்கான சூட்டிங் எப்போது தொடங்கும் என்பது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






