கொரொனாதான் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் கட்டுபாடுக்கு காரணமா?
கொரொனா எதிரொலியாக வாட்ஸ் அப் செயலியில் வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பதற்கான நேர அளவு குறைக்கப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதனால் ஏற்படும் தொழில்நுட்ப ரீதியான சிக்கல்களை சமாளிப்பதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவை குறைத்துள்ளது. ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவு 30 வினாடி வரை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது 15 வினாடிகள் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் சர்வர் தங்குதடையின்றி இயங்குவதற்காக தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






