--- --:--:-- --

ஆசிரியர்களின் தொகுப்பு ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு..!

4

மிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறந்த கலைஞர்-ஆசிரியர்களின் மாத ஊதியம் ரூ.25,000 ஆக உயர்த்தப்படுவதாக அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். மேலும், சென்னை மற்றும் 23 மாவட்ட அருங்காட்சியகங்கள் ரூ.20 கோடி செலவில் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும், 4 புதிய மாவட்டங்களில் அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை முதல் பட்ஜெட் மீது துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் புதன்கிழமை (19.08.2026) நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

 

 

கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் புதிய அறிவிப்புளை வெளியிட்டார்.கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் விரிவுரையாளர் / பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு தொகுப்பூதியத்தில் நிரப்பி, மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

 

 

சிறந்த கலைஞர்கள் ஆசிரியர்களாக ரூ.20,000 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கான மாத ஊதியம் ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதற்கென தொடர்ந்து கூடுதல் செலவினமாக ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை அரசு அருங்காட்சியகம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இணையதள அருங்காட்சியகமாக அறிமுகப்படுத்தப்படும்.

 

 

சென்னை அரசு அருங்காட்சியகம் மற்றும் 23 மாவட்ட அருங்காட்சியகங்கள் ரூ.20 கோடி செலவில் 2 ஆண்டுகளில் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும். அருங்காட்சியகப் பொருட்கள் டிஜிட்டல் வடிவில் பதிவு செய்யப்பட்டு, நுழைவுச் சீட்டுகள் கணினிமயமாக்கப்படும். இதற்கான டி.பி.ஆர் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும். அருங்காட்சியக விரிவாக்கத்தின் முதல்கட்டமாக 4 மாவட்டங்களுக்கான திட்ட அறிக்கை ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.

 

 

தற்போது 23 மாவட்டங்களில் செயல்படும் அரசு அருங்காட்சியகங்கள் மீதமுள்ள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். முதல்கட்டமாக நாமக்கல், திருவள்ளூர், கன்னியாகுமரி மற்றும் அரியலூரில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்க ரூ.80 லட்சம் செலவில் டி.பி.ஆர் தயாரிக்கப்படும். அகழாய்வுக்கான நிதி ரூ.10 கோடியாக உயர்த்தப்படும். பூம்பூகாரில் ஆழ்கடல் அகழாய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

 

 

தொல்பொருட்கள் மற்றும் மாதிரிகளை அறிவியல் பகுப்பாய்வு மேற்கொள்ள நவீன தொல்லியல் ஆய்வகம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். தொல்லியல் கள ஆய்வு, அகழாய்வு மற்றும் ஆழ்கடல் அகழாய்வுக்கான நிதி ரூ.10 கோடியாக உயர்த்தப்படும். தமிழரின் கடல் வழி வணிகம், துறைமுகம் மற்றும் ஆற்றங்கரைப் பண்பாட்டினை வெளிக்கொணர ரூ.3 கோடியில் கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.” என்று அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon