சவர தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 1500 கடைகள் அடைப்பு! 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரிக்கை !!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1024 ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பும் 27 ஆகியுள்ளது. தமிழகத்தில் ஈரோட்டில் மட்டும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில் எண்ணிக்கையும் 50 ஆகியுள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை பலி எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கையும் 7 லட்சத்தை எட்டியுள்ளது. இதில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன், ஈரான் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும், நோய் தொற்று பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கையும் விறுவிறுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 170 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1024 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் இன்று 27 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்திலும் நேற்று மேலும் பேருக்கு கொரோனா பாதிப்பு 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவருக்கு சிகிச்சை அளித்த இளம் பெண் மருத்துவர், அவருடைய 10 மாத குழந்தை, மருத்துவரின் தாய் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண் என ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் இதுவரை 43,538 பேர் தனிமைப்படுத்தப் Uட்டு உள்ளதாகவும், கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 17 ஆயிரம் படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மத்திய அரசு சமூக விலகலை கடைபிடிக்கும் பொருட்டு மத்திய அரசு சார்பில் வரும் ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பால், மளிகை,மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் திறந்திருக்க மாநில அரசு உத்தரவிட்டது.இதனால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு சவரத்தொழிலாளர்கள் சங்கத்தின் மாநகர மாவட்டம் சார்பில் அதன் தலைவர் ராமசாமி தலைமையிலான நிர்வாகிகள் இன்றோ கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணியை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த அதன் தலைவர் ராமசாமி ” சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் விதித்த 144 தடை உத்தரவை பின்பற்றி கடைகளை அடைத்துள்ளதாகவும்,இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,கடை ஒன்றிற்கு ரூ.15 ஆயிரம் நிவாரணத்தொகையாக வழங்கினால் தங்களது வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என தெரிவித்தார்.
மேலும், மனு அளித்த பின் மாவட்ட ஆட்சியர் மனுவினை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.






