--- --:--:-- --

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிதி உதவி!

7

கொரொனா நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது .

 

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரொனா தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகளை திமுக அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேற்கண்ட நிதி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம்முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் கொரொனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக திமுக மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon