கடன்களுக்கான வட்டியினை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது..!
கொரொனா பொது முடக்க காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன்களை வசூலிக்க வட்டியினை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கொரொனா இருக்கும் காலத்தில் வங்கிகளில் பெற்று கடன் தவணையை திரும்பிச் அடுத்த ஆறு மாதங்களுக்கு சலுகையை மத்திய அரசு ரிசர்வ் வங்கியும் அறிவித்தது.
ஆனால் இந்த சலுகை காலத்தில் கடனைச் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தவணைக் காலத்தை நீட்டிக்கக் கோரி, வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கொள்கைகளில் தலையிட விரும்பவில்லை என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் பொருளாதார அறிஞர்கள் கிடையாது என குறிப்பிட்டார்.
மேலும் வங்கிகளில் வசூலித்த மொத்த வட்டியும் தள்ளுபடி செய்ய இயலாது எனக் கூறிய நீதிபதிகள் அது இயலாத காரணம் எனவும் தெளிவுபடுத்தினார்.
அதேநேரம் இரண்டு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டி வசூல் செய்து இருந்தால் அதை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும் அல்லது வாடிக்கையாளர்கள் எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய கடன் தொகையை கழித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.






