--- --:--:-- --

ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்த முடியாதது அழியாத வடு : பிரதமர் மோடி

_cc3190a8-d39b-11e9-bf18-74205beb354d

தனது நெருங்கிய நண்பரான அருண் ஜெட்லியின் நேரில் இறுதி அஞ்சலி செலுத்த முடியாத தன் மனதில் என்றும் நீங்காத வடுவாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அண்மையில் காலமான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.

 

இதில் பேசிய பிரதமர் தானும் ஜெட்லியும் நீண்டகால நண்பர்கள் என்றும் அவருக்கு தான் அஞ்சலி செலுத்தும் நாள் வரும் என்பதை நினைத்துக்கூட பார்த்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஜெட்லி ஒரு விலைமதிப்பில்லாத ரத்தினம் என்று குறிப்பிட்ட பிரதமர் நாட்டிற்காக கடுமையாக உழைக்க தூண்டுகோலாக இருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

அருண்ஜெட்லி கடந்த மாதம் 24 ஆம் தேதி காலமான போது பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டில் ஜி7 நாடுகள் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon