பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐநா தீர்மானத்திற்கு, இந்தியா உள்பட 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த பிரச்னைக்கு அமைதியாக தீர்வு காண ஐநாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதில் USA, இஸ்ரேல் உள்ளிட்ட 10 நாடுகள் எதிராக வாக்களித்தன. வரும் 22-ம் தேதி நடைபெறும் ஐநா உச்சி மாநாட்டில் பாலஸ்தீன அரசை ஃபிரான்ஸ் முறையாக அங்கீகரிக்க உள்ளது.





