செந்தில் பாலாஜி முன்னாள் உதவியாளர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளரும் மின்சார துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியுமான காசி என்பவரது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று அதிகாலையில் இருந்து சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.





