பறந்து கொண்டிருந்த விமானத்தில் அவசர கால கதவை திறக்க முற்பட்ட ஒருவர்.. சக பயணிகள் அலறல்..!
பறந்து கொண்டிருந்த விமானத்தில் ராணுவ வீரரின் செயலை பார்த்து அச்சத்தில் கூச்சலிட்டு சக பயணிகள் அச்சமடைந்தனர். டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தின் அவசர காலக் கதவை ராணுவ அதிகாரி திறக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பறந்து கொண்டிருந்த விமானத்தின் ராணுவ வீரரின் செயலை பார்த்து அச்சத்தில் பயணிகள் கூச்சல் போட்டுள்ளனர். விமானத்தில் அவசரகால கதவை திறக்க முயன்றவர் செங்கத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் தரையிறங்கியதும் ராணுவ வீரரை பிடித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் இண்டிகோ நிர்வாக ஊழியர்கள் ஒப்படைத்தனர். இண்டிகோ விமானி அளித்த புகாரியில் ராணுவ வீரரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





