இராமநாதபுரத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது பாட்டில் வாங்கும் அவலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்..!
இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை . ஆனால் இத்தகைய காலகட்டத்தில் பஸ், ரயில், மார்க்கெட், கோவில்கள், மால் தியேட்டர், பள்ளிகள், கல்லூரிகள் என அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அரசுக்கு வருவாயை ஈட்ட மட்டும் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி வழங்கியது.
இதனால் மக்கள் காலை முதல் இரவு வரை கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளி இன்றி மதுப்பிரியர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தின் பின்புறம் டாஸ்மாக் கடை இந்த கொரோனா காலத்தில் தற்போது புதிய கடை திறந்து அமோக வசூல் செய்து வருகிறது மாவட்ட நிர்வாகம் இந்த கடை அருகில் இரண்டு மருத்துவமனை, பள்ளிகள் உள்ளன. மருத்துவமனைக்கு வரும் பெண்கள் முகம் சுழிக்கும் இடையூறாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் இந்த கடையில் பணிபுரியும் விற்பனையாளர் மதுபாட்டில்களை அரசு நிர்ணயித்த விலையில் இருந்து கூடுதலாக பத்து ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
இதுவொரு புறம் இருக்க ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதுபாட்டில்களை வாங்கிச் செல்வது அரங்கேறி வருவது மிகுந்த மனவேதனை அளிப்பதாக கூறுகின்றனர். மருத்துவமனை வரும் பெண்கள் இந்த டாஸ்மாக் கடையை அகற்றி பெண்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கடையில் வைத்திருக்கும் டாஸ்மாக் கடையின் பதாகையில் கடை எண் இல்லாமல் உள்ளது மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.






