வாசனை, சுவை தெரியவில்லையென்றால் அது கொரோனா பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது!
கொரோனா பாதித்ததற்கான புதிய அறிகுறி குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா பாதித்தவர்களுக்கு வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இல்லாமல் போகும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா பாதித்தவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல், தொண்டை வறட்சி, வயிற்றுப்போக்கு ஆகியவை அறிகுறிகளாக இருக்கும் என்று சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.
மேலும் அறிகுறியே இல்லாமல் பலபேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருவதாகவும், இந்தச் சூழலில் சுவை மற்றும் மணம் அறியும் திறன் இல்லாமல் போவது கொரோனா பாதிப்பின் அறிகுறி என்று சுகாதாரத் துறை தெளிவுப்படுத்தியிருக்கிறது. கொரோனா பாதித்தவர்கள் தும்மும்போதும், இருமும்போதும் வெளியாகும் நுண்ணிய நீர்த்துளிகள், காற்று மற்றும் திடப்பொருட்களில் விழுந்து அப்படியே இருக்கும். இதனை நாம் கைகளால் தொட்டு மூக்கு, வாய் அல்லலது கண்களில் வைக்கும்போது கொரோனா பரவும் என கூறப்பட்டுள்ளது.






