--- --:--:-- --

அக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை அமல்..!

13

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கிக் கிளைகள் மூலம் பராமரிக்கப்படும் அடிப்படை சேமிப்பு கணக்குகளுக்குப் (BSBD) பணம் எடுப்பதற்கான புதிய கட்டண நடைமுறையை அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு மாதத்தில் 4 முறை வரை நேரடியாக வங்கியில் இருந்து இலவசமாகப் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

 

 

ஆனால் 4 முறைக்கு மேல் பணம் எடுக்கும் பட்சத்தில், அடுத்து மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 உடன் ஜி.எஸ்.டி (GST) கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த புதிய விதிமுறைகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், டிஜிட்டல் முறையிலான அனைத்து பணப் பரிவர்த்தனைகளும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்று வங்கி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon