--- --:--:-- --

கால்வாயில் இடிந்து விழுந்த 3 மாடி கட்டடம்!

9

மேற்கு வங்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் ஒன்று அருகில் உள்ள கால்வாயில் இடிந்து விழும் வீடியோ வெளியாகியுள்ளது. மதினாப்பூர் மாவட்டம் நெசாந்தப்பூர் கிராமத்தில் கால்கால்வாயில் இருந்து சில மீட்டர் தூரத்தில் 3 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.

 

அந்த கால்வாயை தூர்வார நடைபெற்ற பணியின்போது கட்டடத்தின் பவுண்டேஷன் பகுதி பலவீனமாகி சில நாட்களுக்கு முன்பு பரவலாக விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பெய்த மழையால் மேலும் பலவீனமாகி கால்வாய்க்குள் அப்படியே இடிந்து விழுந்து சிதறியது.

 

அப்போது கட்டடத்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு நேரிடவில்லை. இந்த காட்சி அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட அது வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon