ரஜினிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை..! இனி வாயை திறக்கவே மாட்டேன்..! தமிழருவி மணியன் அப்செட் ஆனது ஏனோ?
நடிகர் ரஜினி கட்சி தொடங்குவது பற்றி தமிழருவி மணியன் கொடுத்த பேட்டி ஒரே நாளில் ஏகப்பட்ட சர்ச்சைகைளயும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்திவிட்டது.இந் நிலையில், இனி ரஜினி கட்சி தொடங்குவது பற்றி அவராக அறிவிக்கும் வரை வாயை திறக்கவே மாட்டேன் எனதமிழருவி மணியன் சைலண்ட் மோடுக்கு சென்று விட்டது பரபரப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
ரஜினி கட்சி தொடங்குவாரா ? மாட்டாரா? என்ற விவாதங்கள் பல காலமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. சமீப காலமாக ரஜினிக்கு அட்வைசர் போல் செயல்பட்டு வரும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
ரஜினி ஏப்ரலில் புதுக் கட்சி தொடங்டுகிறார். ஆகஸ்டில் கட்சி மாநாடு. செப்டம்பரில் தமிழகம் முழுவதும் ரஜினி சுற்றுப் பயணம் . ரஜினி கட்சியுடன் பாமக கூட்டணி சேரும். டிடிவி தினகரனின் அமமுகவை கூட்டணியில் சேர்த்தால் கெட்ட பெயர் வரும். அதனால் சேர்க்க மாட்டோம். வேறு பல கட்சிகளும் ரஜினியுடன் கூட்டணி சேர வரிசையில் காத்துள்ளன. அதிமுகவில் இருந்து கூட 2 முக்கிய மூத்த தலைவர்கள் ரஜினி கட்சியில் ஐக்கியமாகிறார்கள் என்றெல்லாம் தமிழருவி மணியன் தனது பேட்டியில் அள்ளிவிட்டிருந்தார்.

ஏதோ ரஜினியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் போல தமிழருவி மணியன் வாய்ஸ் கொடுத்திருந்தது தமிழக அரசியலில் நேற்று ஒரே நாளில் பெரும் பரபரப்பையும் கூடவே சலசலப்பு, சர்ச்சை, எதிர்ப்புகளையும் ஏற்படுத்திவிட்டது. ரஜினி கட்சி தொடங்குவது பற்றியும், கூட்டணி பற்றியும் அறிவிக்க தமிழருவி மணியன் யார்? என்ற விமர்சனங்களும் வரிசை கட்டின.
ரஜினியுடன் பாமக கூட்டணி என்ற அறிவிப்பு பாமக மேலிடத்துக்கே பெரும் அதிர்ச்சியாகி விட்டதாம். அதிமுக கூட்டணியில தான நீடிக்கிறோம். நாம எப்போ ரஜினி கூட கூட்டணி பற்றி பேசினோம், யார்? யாருடன் பேசினார்கள்? என்ற ரீதியில் பாமகவில் சலசலப்பு ஏற்பட்டது.
பாமக தரப்பில் இப்படி என்றால் அமமுக தரப்புலோ ஏகத்துக்கும் கொந்தளித்தே விட்டனர். நாங்க என்ன கூட்டணிக்காக ரஜினி வீட்டு முன்னாடி தவமிருந்தோமா? எங்களைப் பற்றிப் பேச தமிழருவி மணியன் யார்? அவர் என்ன ரஜினியின் அதிகாரப் பூர்வ செய்தி தொடர்பாளரா? அவருக்கு எதுக்கு இந்த புரோக்கர் வேலை என அமமுக பொருளாளர் வெற்றிவேல் தனது சென்னை மொழியில் ஏகத்துக்கும் எகிறிவிட்டார். மேலும் தமிழருவி மணியனுக்கு ரஜினி தரப்பில் இருந்தே ஏன் இந்த வீண் வேலை என்பது போல நெருக்கடி வந்ததாகவும் தெரிகிறது.

இதனால் தமிழருவி மணியன் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டார் போல தெரிகிறது. எனக்கும் ரஜினிக்கும் எந்த சம்பந்தமில்லை. இனி ரஜினியாக கட்சி பற்றி அறிவிக்கும் வரை வாயை திறக்க மாட்டேன். நான் காந்திய சிந்தனை இயக்கத்தின் தலைவராகவே இருந்து விட்டு போகிறேன் என்ற ரீதியில் அறிவித்துவிட்டு சைலண்ட் மோடுக்கு சென்று விட்டார்.
இதுக்குப் பேர்தான் சும்மா வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்குவது என்பார்களோ?





