--- --:--:-- --

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு..! டெல்டா மாவட்டங்களில் திமுக ஆர்ப்பாட்டம்!!

10

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 5 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

 

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அப்பகுதி விவசாயிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விளை நிலங்களை பாலைவனமாக்கும் இத்திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதனால் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

 

இந்நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவையில்லை. பொதுமக்களின் கருத்தை கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என மத்திய அரசு சமீபத்தில் திடீரென அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழகத்தில் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்தும் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

அதன்படி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Right Menu Icon