மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்..! தாய், சேய் பலியான சோகம்..!
எட்டு மாத கர்ப்பிணிக்கு கணவர் பிரசவம் பார்த்த குழந்தையும், தாயும் உயிரிழந்த சம்பவத்தில் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். தாயை இழந்த மூன்று குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
சேலம் சீலநாயக்கன்பட்டி நகரை சேர்ந்த தம்பதி பூபதி – பார்வதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதனால் பார்வதி கர்ப்பம் தரித்ததால் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்துள்ளனர். இதனிடைய எட்டு மாத கர்ப்பிணியான பார்வதிக்கு பூபதி பிரசவம் பார்த்துள்ளார்.
இதில் குழந்தை இறந்த நிலையில் நிலைமை மோசமாகி பார்வதியும் இறந்ததாக கூறப்படுகிறது. சடலங்களை கைப்பற்றி பூபதியை போலீசார் கைப்பற்றி சிறையில் அடைத்தனர். தாய் இறந்தது கூட தெரியாமல் அம்மா எப்போது வருவார் என்று அழும் குழந்தைகளை பாட்டி சமாதானம் செய்யும் காட்சி பார்ப்போரை கண் கலங்க செய்தது.
தனது மகள் கருவுற்றிருப்பது கடைசிவரை தனக்கு தெரியாது என்றும் தெரிந்திருந்தால் எப்படியாவது காப்பாற்றி இருப்பேன் என்றும் பார்வதியின் தாய் பழனியம்மாள் வேதனை தெரிவித்துள்ளார்.





