இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 13-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான இளநிலை நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.
இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் மொத்தம் 4,99 நகரங்களில் நீட் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணைய வழியாக கடந்த மார்ச் 6ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை பெறப்பட்டன.
இந்நிலையில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று வரும் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.





