--- --:--:-- --

ஆஃப் பாயிலுக்காக ஹோட்டலில் நடந்த தகராறு..!

7

திருச்சி மாவட்டம் முசிறியில் ஆப்பாயில் தகராறு காரணமாக ஹோட்டலை சூறையாடியதோடு செய்தியாளரையும் விவசாய சங்கத்தின் உறவினர்கள் அடித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.

 

அய்யாக்கண்ணு சகோதரி மகனான ராஜபாண்டி முசிறிகைகாட்டி அருகே ஓட்டலில் ஆர்டர் செய்து வருவதற்கு தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் கடை உரிமையாளர் பாஸ்கர், மாஸ்டர் முருகேசன் ஆகியோரை ராஜபாண்டி தாக்கியதோடு ஹோட்டலை சூறையாடியதாக புகார் அளிக்கப்பட்டது.

 

இதுகுறித்து செய்தி சேகரிப்பதற்காக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வீடியோ எடுக்க முற்பட்டார்.

 

அப்போது அங்கு வந்த ராஜபாண்டியும் அவரது அண்ணனும், வழக்கறிஞருமான கார்த்திகேயனும் சுரேசை அடித்து உதைத்து அவரது செல்போனை பிடுங்கி உடைத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon