அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை..!
சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மழை பாதிப்பை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகள் தவிர்த்து சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மேலும் தனியார் நிறுவனங்களின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு பணியாளர்களுக்கு இன்று விடுமுறை அளித்து பணி புரியும் வகையில் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.






