இந்தி பிரபல நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சுயசரிதையில் ஹீரோவாக நடித்த சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மும்பை பாந்திராவில் உள்ள தமது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நடிகை சுஷாந்த் சிங்கிற்கு 34 வயதே ஆன நிலையில் அவரின் தற்கொலை திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுவரை 12 படங்களிலும், 4 தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கும் சுஷாந்த் பிலிம் ஃபேர் உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார். அவரின் மறைவுக்கு ரசிகர்களும் திரை உலகினர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி தெரிவித்துள்ளனர்.







